sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

91 வயதிலும் அர்ப்பணிப்பான கல்வி விவசாயி

/

91 வயதிலும் அர்ப்பணிப்பான கல்வி விவசாயி

91 வயதிலும் அர்ப்பணிப்பான கல்வி விவசாயி

91 வயதிலும் அர்ப்பணிப்பான கல்வி விவசாயி


UPDATED : பிப் 25, 2025 12:00 AM

ADDED : பிப் 25, 2025 10:58 AM

Google News

UPDATED : பிப் 25, 2025 12:00 AM ADDED : பிப் 25, 2025 10:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:
91 வயது முதியவராக இருந்தாலும் கல்வி, ஆன்மிகம், சமுதாயம், விவசாயப்பணி என சுறுசுறுப்புடன் செயல்படுகிறார் மதுரை மாவட்டம் பேரையூர் எழுமலை விவேகானந்தா நடுநிலைப்பள்ளி தாளாளர் சுவாமி சிவானந்தா.

அவரை தொடர்பு கொண்டு பேசியபோது:


சுவாமி சிவானந்தா பிறந்தது மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே லாலாபுரம். பெற்றோர் இட்ட பெயர் துரைராஜ். 6 வகுப்பு வரை பள்ளியில் படித்தேன். பிரைவேட்டாக 8ம் வகுப்பு முதல் ஆசிரியர் பயிற்சி வரை முடித்து அரசுப்பள்ளியில் ஆசிரியராக சேர்ந்து தலைமை ஆசிரியராக உயர்வு பெற்றேன்.சுவாமி சித்பவானந்தர் என் ஆன்மீக குரு. சுவாமி நித்யானந்தரிடம் மந்திர உபதேசம் பெற்று துறவியாக மாறினேன். ராமகிருஷ்ண விவேகானந்த பாவ பரிஷத் அமைப்பில் உறுப்பினராக பணிபுரிகிறேன். பக்தியை பரப்புவதும், சனாதன தர்மத்தை காப்பதுமே இதன் குறிக்கோள்.

ஒருமுறை எழுமலை புறநகர் பகுதியில் நான் நடந்து சென்றேன். வழியில் 70 வயது முதியவர் ஓடி வந்து, ஐயா அங்கே பாருங்கள் என கூச்சலிட்டார். அவர் கைக்காட்டிய திசையில் முதியவரின் இரண்டு மகன்கள் ஒருவருக்கொருவர் கத்தியுடன் சண்டையிடுவதை கண்டேன். எங்கள் வீட்டு குழந்தைகள் யாரும் கல்வி கற்கவில்லை. இப்பகுதியில் நீங்கள் பள்ளிக்கூடம் நடத்தினால் அவர்கள் ஒழுக்கமுடன் வளர்வார்கள் என காலைப் பிடித்து அழுதார். நானும் சம்மதம் தெரிவித்து அதற்கான பணிகளில் ஈடுபட்டேன். திருப்பராய்த்துறை ராமகிருஷ்ணா தபோவன துறவி ஓங்காரானந்தா பள்ளிக் கட்டடத்திற்கு பூமி பூஜை செய்தார். 1986ல் குஹானந்த மகராஜ் பள்ளிக்கூடத்தை திறந்து வைத்தார்.

இடப்பற்றாக்குறையால் எழுமலை செல்லாயிபுரத்தில் 6 ஏக்கர் நிலம் வாங்கி புதிய பள்ளிக்கூடம் கட்டப்பட்டது. தற்போது தமிழ், ஆங்கில மீடியத்தில் 300 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் எழுமலையை சுற்றி செல்லாயிபுரம், சூலப்புரம், உலைப்பட்டி, சீல்நாயக்கம்பட்டி, ஆத்தாங்கரைபட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள். 18 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். கல்வியுடன் ஒழுக்கம், ஆன்மிகம் சிந்தனைக்கே முதலிடம் அளிக்கிறோம். காலை 9 மணி, மதியம் 1 மணிக்கு தினமும் பிரார்த்தனை, திருக்குறள், வகுப்புகள் நடக்கிறது. வாரத்தில் 2 நாள் யோகாசனம், கராத்தே, சிலம்பம், மேடைப்பேச்சு பயிற்சிகள் தரப்படுகின்றன.

1989ல் கைலாஷ் யாத்திரை சென்றேன். பகவான் ராமகிருஷ்ணர் அவதரித்த கமார்பூர், அன்னை சாரதாதேவியார் அவதரித்த ஜெயராம்பாடியில் இருந்து கொண்டு வரப்பட்ட ஆலமரக் கன்றுகள் மரமாக வளர்ந்து பள்ளி வளாகத்தில் நிழல் தருகின்றன. அரசு, ஆல், வேம்பு, தென்னை, வாழை, வாதாம் மரம் என நூற்றுக்கணக்கில் மரங்கள் உள்ளன.

விடுமுறை நாட்களில் மரங்களுக்கு மாணவர்கள் தண்ணீர் பாய்ச்சுகின்றனர். மாணவர் வீடுகளில் வளர்க்க மரக்கன்று பரிசாக தருகிறோம். அணில், காகம், எறும்பு பல்லுயிர்கள் வாழ மரங்கள் துணைபுரிகின்றன. நிழல் தரும் மரங்களை வெட்டுவது பாவம். பிறந்தநாள், திருமண நாளில் அனைவரும் மரக்கன்று நட்டு வளர்க்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us