UPDATED : அக் 10, 2024 12:00 AM
ADDED : அக் 10, 2024 08:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:
பள்ளிக்கல்வித்துறை சார்பில், பிளஸ் 1 மாணவ-மாணவிகளுக்கு, தமிழ் மொழி இலக்கிய திறனறித்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு தேர்வு வரும், 19ம் தேதி நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு காந்திஜி சாலை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, செங்குந்தர் பள்ளி, இந்து கல்வி நிலையம், வேளாளர் மகளிர் பள்ளி, பி.வி.பி பள்ளி என, 37 மையங்களில் தேர்வு நடக்கிறது. அரசு, அரசு நிதியுதவி, தனியார் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளி என, 9,443 மாணவ-மாணவியர் தேர்வெழுத உள்ளனர். இதில் சிறந்த மதிப்பெண் பெறும் 1,500 பேருக்கு, மாதந்தோறும், 1,500 ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் அரசுப்பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.