தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/96.15 சதவீதம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி: மாநில அளவில் தேனி 12வது இடத்திற்கு முன்னேற்றம்

96.15 சதவீதம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி: மாநில அளவில் தேனி 12வது இடத்திற்கு முன்னேற்றம்

96.15 சதவீதம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி: மாநில அளவில் தேனி 12வது இடத்திற்கு முன்னேற்றம்


UPDATED : மே 21, 2026 04:17 PM

ADDED : மே 21, 2026 04:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 21, 2026 04:17 PM ADDED : மே 21, 2026 04:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேனி மாவட்டத்தில் தேர்வு எழுதியதியவர்களில் 96.15 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு மாநில அளவில் 32 வது இடம் பிடித்த தேனி இந்தாண்டு 20 இடங்கள் முன்னேறி 12ம் இடத்தை பிடித்துள்ளது. 101 பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரலில் நடந்தது. மாவட்டத்தில் உள்ள 200 பள்ளிகளைச் சேர்ந்த 6931 மாணவர்கள், 7031 மாணவிகள் என மொத்தம் 13,962 பேர் தேர்வு எழுதினர். இதில் 6566 மாணவர்கள், 6858 மாணவிகள் என 13,424 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி விகிதம் 96.15 சதவீதம் ஆகும். 538 மாணவர்கள் தோல்வி அடைந்தனர். கடந்தாண்டு தேர்ச்சி விகிதம் 91.58 சதவீதம் ஆகும்.

முன்னேற்றம்


கடந்த ஆண்டில் தேனி மாவட்டம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடிவில் 32வது இடம் பிடித்திருந்தது. இந்தாண்டு 20 இடங்கள் முன்னேறி 12ம் இடத்தை பிடித்துள்ளது. அதே போல் கடந்தாண்டை விட கூடுதலாக 27 பள்ளிகளில் நுாறுசதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 101 பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.

தமிழில் நுாறுக்கு நுாறு மதிப்பெண் இல்லை



பாடம் வாரியாக ஆங்கிலத்தில் ஒரு மாணவி, கணிதத்தில் 47 பேர், அறிவியலில் 246 பேர், சமூகஅறிவியில் 33 பேர் நுாறுக்கு நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழ் பாடத்தில் ஒருவர் கூட நுாறு மதிப்பெண் பெறவில்லை.

மாவட்டத்தில் அரசு கள்ளர் பள்ளிகள், நகராட்சிப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகள் என 40 அரசுப்பள்ளிகளில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சி.இ.ஓ., நாகேந்திரன் கூறுகையில், 'மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க கலெக்டர் அறிவுறுத்தலில் கற்றல் திறன் குறைந்த மாணவர்கள் எளிதாக படிக்கும் வகையில் மினி கையேடு பாடம் வாரியாக வழங்கப்பட்டது. மேலும், ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பாடங்களை விளக்க அறிவுறுத்தப்பட்டது. மாலை நேர சிறப்பு வகுப்புகள் கைகொடுத்துள்ளன. இதனால் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது என்றார்.




தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us