UPDATED : ஜன 25, 2025 12:00 AM
ADDED : ஜன 25, 2025 11:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை:
திருப்பூரில் நடக்கவுள்ள குடியரசு தின விழா கலைநிகழ்ச்சியில், ஆறு பள்ளிகளைச்சேர்ந்த, 965 மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர்.
நாளை (26ம் தேதி) குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி மைதானத்தில் கலெக்டர் கொடியேற்றி, தியாகிகளை கவுரவிக்கிறார். முன்னதாக, போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொள்கிறார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்டம் முழுதும் இருந்து, தலா மூன்று அரசு மற்றும் தனியார் பள்ளி என, ஆறு பள்ளிகளை சேர்ந்த, 965 மாணவ, மாணவியர் கலைநிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.