UPDATED : மார் 30, 2024 12:00 AM
ADDED : மார் 30, 2024 11:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை:
செய்யாறு மத்திய கூட்டுறவு மருந்தகத்தில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், 2014ம் ஆண்டு மருந்தாளுனராக பணிபுரிந்தார்.
அங்கு பணம் கையாடல் நடப்பதாக வந்த புகாரின்படி, கூட்டுறவு சங்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது மருந்தாளுனர் கார்த்திக், 9.95 லட்சம் ரூபாயை கையாடல் செய்தது தெரிந்தது.
இதுகுறித்து திருவண்ணாமலை வணிக குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருவண்ணாமலை ஜே.எம்., 2 கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். விசாரித்த நீதிபதி கதிரவன், நேற்று முன்தினம், மருந்தாளுனர் கார்த்திக்கிற்கு, 2 ஆண்டு சிறை மற்றும் 20,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.