UPDATED : அக் 07, 2024 12:00 AM
ADDED : அக் 07, 2024 05:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழா சென்னையில் உள்ள அதன் தலைமையகத்தில் இன்று நடைபெற்றது.
பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மாலினி வி.சங்கர் பட்டங்களை வழங்கினார். தலைமை விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா சிறந்த மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார். பட்டம் பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துத் தெரிவித்த அவர், பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், 1974 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் 4 முனைவர் பட்டங்களும், ஆராய்ச்சிக்கான ஒரு எம்எஸ் பட்டமும் அடங்கும்.