பிளஸ் 2, 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் கொல்லிமலை மாணவர்களுக்கு 'ஜாக்பாட்'
பிளஸ் 2, 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் கொல்லிமலை மாணவர்களுக்கு 'ஜாக்பாட்'
UPDATED : டிச 15, 2025 07:52 AM
ADDED : டிச 15, 2025 07:54 AM
நாமக்கல்:
கொல்லிமலை, அரியூர் புதுவலவு அரசு மேல்நி-லைப்பள்ளியில், 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தலைமையாசிரியராக காளிதாஸ் உள்ளார். இந்நிலையில், மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை)புருசோத்தமன், திறன் வகுப்பு மாணவர்களின் தரத்தை ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, இடைநிற்றல் குழந்தைகளின் விபரங்கள், அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பது குறித்தும்,தலைமையாசிரியர், ஆசிரியர்களிடம், மாவட்ட கல்வி அலுவலர் புருசோத்தமன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து, பள்ளியின் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில், பள்ளி வளாகத்தில் மரக்கன்-றுகள் நடப்பட்டன. தலைமையாசிரியர் காளிதாஸ், மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வரதராஜ், ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து, தலைமையாசிரியர் காளிதாஸ் கூறியதாவது:
எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், பிளஸ் 2 பொதுத்தேர்வில், 600க்கு, 500க்கு மேலும், பத்தாம் வகுப்பில், 500க்கு, 475 மதிப்பெண்ணுக்கு மேல் எடுக்கும் ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும், தாலா, 5,000 ரூபாய் பரிசு வழங்கப்படும் என, அறிவித்துள்ளோம். இதையடுத்து, மாணவர்கள் முனைப்புடன் கவனம் செலுத்தி படித்து வருகின்றனர். ஆசிரியர்களும் அவர்களுக்கு ஊக்கமளித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

