UPDATED : ஜூன் 09, 2025 12:00 AM
ADDED : ஜூன் 09, 2025 04:47 PM
தங்கவயல்:
பார்வையற்றவரான ஞானானந்தா எழுதிய கோல்டன் விங்ஸ் என்ற ஆங்கில நுால் வெளியீட்டு விழா, ராபர்ட்சன்பேட்டையில் வரும் 14ம் தேதி நடக்கிறது.
தங்கவயலை சேர்ந்த ஓய்வுபெற்ற தபால் துறை அதிகாரி ஞானானந்தா தமிழில் இரண்டு நுால்கள் எழுதியிருந்தார். மூன்றாம் நுாலாக கோல்டன் விங்ஸ் என்று ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா, வரும் 14ம் தேதி காலை 10:00 மணிக்கு ராபர்ட்சன்பேட்டை மொய்து பேலசில் நடக்கிறது.
பேராசிரியர் சுப்பிரமணியன் தலைமை வகித்து நுாலை வெளியிடுகிறார். வர்த்தக சபைத் தலைவர் மொய்து புகாரி, மாணவர் சங்கத் தலைவர் தினேஷ், கலை இலக்கிய பாசறை தலைவர் மு.கோவலன், தமிழ்ச் சங்க செயல் தலைவர் கமல் முனிசாமி, பெமல் தமிழ் மன்ற தலைவர் ஜி.ரமேஷ்குமார், உலகத் தமிழ்க்கழக தலைவர் இருதயராசன் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.