sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பொறியியல் படிப்புகளுக்கு சிறப்பான எதிர்காலம்

/

பொறியியல் படிப்புகளுக்கு சிறப்பான எதிர்காலம்

பொறியியல் படிப்புகளுக்கு சிறப்பான எதிர்காலம்

பொறியியல் படிப்புகளுக்கு சிறப்பான எதிர்காலம்


UPDATED : ஏப் 05, 2025 12:00 AM

ADDED : ஏப் 05, 2025 10:34 AM

Google News

UPDATED : ஏப் 05, 2025 12:00 AM ADDED : ஏப் 05, 2025 10:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் :
தொழில்நுட்பத்திற்கு ஏற்ற திறமைகளை வளர்த்துக்கொண்டால் அனைத்து பொறியியல் படிப்புகளுக்கும் சிறப்பான எதிர்காலம் உள்ளது என தினமலர், கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் திண்டுக்கல் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி மாலை அமர்வில் கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி பேசினார்.

அவர் பேசியதாவது:


படித்து முடித்து வெளியே வரும்போது உள்ள தொழில்நுட்பத்திற்கு ஏற்ற திறமைகளை வளர்த்துக்கொண்டால் அனைத்து பொறியியல் படிப்புகளுக்கும் சிறப்பான எதிர்காலம் உள்ளது. மிகப்பெரிய தொழில்நுட்ப புரட்சியை நாம் சந்திக்க உள்ளோம். தற்போது உலக அளவில் பேசப்படும் ஏ.ஐ., டேட்டா சயின்ஸ் தொழில்நுட்ப வளர்ச்சி இந்தியாவில் மிக குறைவு தான். ஏ.ஐ., தொழில்நுட்பத்தை தாண்டி தற்போது ஓ.ஐ., (ஆர்க்கனைஸ்டு இன்டலிஜென்ட்) துவங்கிவிட்டது. இதுபோல் டேட்டா சயின்ஸ் தற்போது சிந்தட்டிக் டேட்டா சயின்ஸ் ஆக முன்னேறிவிட்டது. தற்போதை கோடிங்கிங்ல் 80 சதவீதம் மாற்றம் வரப்போகிறது. 70 சதவீதம் வேலை வாய்ப்புகள் டிஜிட்டல் மயமாக போகின்றன. இவ்வகையில், தற்போதுள்ள நம்மிடையே உள்ள 72 சதவீதம் தொழில்நுட்ப திறன்கள் வரும் 2030ல் காலாவதியாகிவிடும்.

ரோபோட்டிக்ஸ் தொழில் நுட்பத்தில் மிகப் பெரிய புரட்சி ஏற்பட உள்ளது. அடுத்து ஹெல்த் கேர் வெர்ஜூவல் ரியாலிட்டி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கியூ.ஆர்., கோடுக்கு பதில் ஐ.ஆர்., கோடு தொழில்நுட்பத்துக்கு வந்து விட்டோம். அதாவது ஏ.டி.எம்., உள்ளிட்ட பண வர்த்தக கார்டுகள் இல்லாமல் தொடுதல் உணர்வு மூலம் பணம் பரிமாற்றம் செய்யும் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ், சைபர் பாதுகாப்பு துறையில் நல்ல எதிர்காலம் உள்ளது.

பொறியியலில் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன்ஸ், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ், பயோ மெடிக்கல் படிப்புகளுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. என்.ஐ.ஆர்.எப்., ரேங்கிங் பெற்ற நல்ல கல்லுாரிகளை தேர்வு செய்வதில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

நீங்களும் ஆகலாம் விஞ்ஞானி

டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானி டில்லி பாபு பேசியதாவது:



அறிவியல் மீது ஆர்வம் உள்ள ஒவ்வொருவருக்கும் விஞ்ஞானி ஆவது என்பது கனவு. விஞ்ஞானிகளுக்கு எல்லாம் ரோல் மாடலாக இருப்பவர், மறைந்த அப்துல் கலாம். அவர் எழுதி அக்னி சிறகுகள் புத்தகத்தை படித்த பின் தான் விஞ்ஞானி ஆகும் ஆர்வம் எனக்குள் ஏற்பட்டது. அதை படித்த பின் அவரை போல் விஞ்ஞானியாக சாதிக்க வேண்டும் என்ற இலக்கை ஏற்படுத்திக்கொண்டேன்.

டி.ஆர்.டி.ஓ.,வின் கீழ் 50 ஆய்வுக் கூடங்கள் உள்ளன. ராணுவ டேங்க், கப்பல், நீர்மூழ்கி கப்பல் உட்பட தரை, ஆகாயம், கடல்சார் உபகரணங்கள், தளவாடங்கள் உள்ளிட்டவற்றை டி.ஆர்.டி.ஓ., உருவாக்குகின்றன. அத்துடன் மருத்துவத்துறைக்கு தேவைப்படும் பல்வேறு உயிர் காக்கும் உபகரணங்களை கண்டுபிடித்து வருவதில் முன்னணியில் உள்ளது.

மருத்துவம், பொறியியல், கலை அறிவியல், வேளாண்மை என எந்த படிப்புகளை படித்தாலும் புதுமையாக சிந்திக்கும் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். மெக்கானிக், சிவில், இ.சி.இ., ஏரோ ஸ்பேஸ், சி.எஸ்., ஐ.டி., கெமிக்கல் இன்ஜி., உள்ளிட்டவை படித்தால் டி.ஆர்.டி.ஓ.,வில் விஞ்ஞானியாக ஆகும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு பேசினார்.

கற்பனை திறன் இருந்தால் அனிமேஷன் துறையில் சாதிக்கலாம்

மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி பேராசியர் கிேஷார் குமார் பேசியதாவது:


கற்பனை திறன் அதிகம் உள்ள, வித்தியாசமாக சிந்திக்கும் திறன், ஓவியம் வரைய தெரிந்தால் மீடியா அன்ட் அனிமேஷன் துறையை மாணவர்கள் தேர்வு செய்யலாம். தற்போது டிஜிட்டல் லேர்னிங், இ லேர்னிங் துறைகளில் ஏராள வேலை வாய்ப்புகள் உள்ளன. தொழில்நுட்பம் வளர்ச்சிக்கு ஏற்ப அனிமேஷன் படித்தவர்கள் தேவை அதிகம் உள்ளது. தற்போது 3 டி அனிமேஷன் தொழில் நுட்பத்தில் முழு சினிமாவை ஒரு அறைக்குள் இருந்து எடுத்துவிடலாம். ஸ்கிரீனுக்கு முன் ஸ்கிரீனுக்கு பின் என வேலை வாய்ப்புகள் ஏராளமாக கொட்டிக்கிடக்கின்றன. அதற்கு சாப்ட்வேர் டெக்னாலஜி அதிகம் தேவை. கேமிங் பிரிவில் ஓவியம் வரைதல், டிசைன், டெலவப்மென்ட் பிரிவுகளில் அதிக தேவைகள் உள்ளன. திரைப்படம், தொலைக்காட்சி தயாரிப்புகளில் எடிட்டிங், காஸ்டியூம்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் எப்போதுமே வேலைவாய்ப்புகள் உள்ளன.

இவ்வாறு பேசினார்.

சேப்டி ஆபீசர்கள் தேவை அதிகரிப்பு


தொழிலக பாதுகாப்பு தொடர்பாக மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி பேராசிரியர் விவேக் ராம்குமார் பேசியதாவது:


தொழில் நிறுவனங்களில் தற்போது பாதுகாப்பு அம்சங்கள் குறித்த அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் ஏதாவது ஒரு நிறுவனம் தயார் செய்தவையே. நிறுவனங்களில் தீ விபத்துகள் நடக்காமல் தடுக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் தீத் தடுப்பு உபகரணங்கள் வசதியுடன் சேப்டி அதிகாரிகள் நியமிக்க வேண்டும். இதற்காக தீ மற்றும் தொழிலக பாதுகாப்பு துறை படிப்புகள் உள்ளன.

இதற்கு பி.எஸ்சி., பயர் அன்ட் இண்டஸ்ட்டிரியல் சேப்டி, எம்.இ., இண்டஸ்ட்டிரியல் சேப்டி, பி.ஜி. டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகள் உள்ளன. துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.பல லட்சத்தில் பணிகள் காத்திருக்கின்றன. கட்டுமான துறைகளுக்கு சேப்டி அதிகாரிகள் பணியிடங்கள் தேவை அதிகம் தேவையாக உள்ளனர். பி.ஜி., முடித்து வெளியே வரும் நோட்டிபைடு சேப்டி ஆபீசர்ஸ் பணிகளுக்கு ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வரை சம்பளம் கிடைக்கிறது. இப்படிப்புக்கு கட்டமைப்பு உள்ள கல்லுாரிகளை தேர்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு பேசினார்.

படித்தவுடன் வேலைகிடைக்கும் கடல்சார் படிப்புகள்

மதுரை ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் நாட்டிக்கல் சயின்ஸ் பேராசிரியர் கேப்ரியேல் பூபாலராயன் பேசியதாவது:


கடல்சார் படிப்புகள் குறித்து தற்போது அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எதிர்காலம் உள்ள படிப்புகள் உள்ளன. இத்துறையில் நேவிகேஷன், இன்ஜின், கேட்டரிங் என்ற மூன்று துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன. அதிக சம்பளம் பெறும் படிப்புகள் இவை. எப்போதும் வேலை வாய்ப்புகள் உள்ள துறை. பிளஸ் 2வில் அறிவியல் பாடம் படித்த மாணவர்கள் பி.டெக்., மரைன் இன்ஜி., பி.எஸ்.சி., நாட்டிக்கல் சயின்ஸ், டிப்ளமோ படிப்புகளை படிக்கலாம்.

தேசிய மேரிடைம் விஷன் 2030 ன் கீழ் இத்துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

இவ்வாறு பேசினார்.






      Dinamalar
      Follow us