தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு உதவி பெறும் பள்ளிக்கும் நலத்திட்ட உதவிகள் வேண்டும்

அரசு உதவி பெறும் பள்ளிக்கும் நலத்திட்ட உதவிகள் வேண்டும்

அரசு உதவி பெறும் பள்ளிக்கும் நலத்திட்ட உதவிகள் வேண்டும்


UPDATED : அக் 10, 2024 12:00 AM

ADDED : அக் 10, 2024 08:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2024 12:00 AM ADDED : அக் 10, 2024 08:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும், அனைத்து நலத்திட்ட உதவிகளை, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கிட வேண்டும் என, சிறுபான்மை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் உரிமை மீட்புக்குழு, தமிழக அரசை வலியுறுத்தி உள்ளது.

உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் கனகராஜ் கூறியிருப்பதாவது:

மாணவர்கள் நலன் கருதி, ஆங்கில வழி இணை பிரிவு மாணவர்களைக் கணக்கிட்டு, பணியிட நிர்ணயம் செய்வதோடு, தகுதியான காலிப்பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களுக்கு, ஊதியம் வழங்கிட வேண்டும்.

1992ம் ஆண்டுக்குப் பின்னர் தொடங்கப்பட்ட, தரம் உயர்த்தப்பட்ட தமிழ்வழிப் பள்ளிகளுக்கு மானியம் அளித்த ஆணையை, செயல்படுத்திட வேண்டும். உதவி பெறும் பள்ளிகளுக்கான அங்கீகாரம் புதுப்பித்தலை, எளிமைப்படுத்துவதோடு, தகுதி வாய்ந்த பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும்.

புதிய தனியார் பள்ளி ஒழுங்காற்றுச் சட்டத்தில், சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள, அடிப்படை உரிமைகளுக்கு எதிரான பிரிவுகளை நீக்கிட வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us