பாலிடெக்னிக் மாணவர்கள் எதிர்காலத்துக்கு உதவும் திட்டம்
பாலிடெக்னிக் மாணவர்கள் எதிர்காலத்துக்கு உதவும் திட்டம்
UPDATED : பிப் 27, 2025 12:00 AM
ADDED : பிப் 27, 2025 09:49 AM
சென்னை:
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடிக்கும் மாணவர்களில் பலர் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் 3 ஆண்டு கால பொறியியல் டிப்ளமோ படிப்பில் சேர்கிறார்கள்.
அதேபோல், பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் லேட்ரல் என்ட்ரி முறையில் நேரடியாக 2ம் ஆண்டு சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். அரசு பாலிடெக்னிக், அரசு உதவிபெறும் பாலிடெக்னிக், தனியார் சுயநிதி பாலிடெக்னிக் என 450க்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் கல்லுாரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஆண்டுதோறும் ஏறத்தாழ 50 ஆயிரம் மாணவர்கள் பயில்கின்றனர்.
ஒரு காலத்தில் பாலிடெக்னிக் டிப்ளமோ படிப்பில் சேர இடம் கிடைப்பது கடினமாக இருந்து வந்தது. தற்போது அந்த நிலை இல்லை.
இந்நிலையில், பாலிடெக்னிக் டிப்ளமோ படிக்கும் மாணவர்களின் வேலை வாய்ப்புத் திறனை அதிகரிக்கவும், இன்றைய தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறமை உடையவர்களாக அவர்களை உருவாக்கும் நோக்கிலும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பாலிடெக்னிக் பயிலும் மாணவர்களின் வேலை வாய்ப்புத் திறனை மேம்படுத்த ஓராண்டு கால தொழிற்பயிற்சி திட்டத்தை நடப்பு கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.