தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பூமிக்கு வருகிறது இரண்டாவது நிலவு

பூமிக்கு வருகிறது இரண்டாவது நிலவு

பூமிக்கு வருகிறது இரண்டாவது நிலவு


UPDATED : செப் 25, 2024 12:00 AM

ADDED : செப் 25, 2024 06:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 25, 2024 12:00 AM ADDED : செப் 25, 2024 06:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வாஷிங்டன்:
பூமிக்கு ஒரே நிலவு தான் உள்ளது. தற்காலிகமாக செப். 29 - நவ., 25ல் இரண்டாவது நிலவு பூமியை சுற்ற உள்ளது.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான 'நாசா' பூமிக்கு அருகே சுற்றி வரும் விண்கல், வால் நட்சத்திரம் உட்பட 34,725 வான் பொருட்களை கண்காணித்து அதன் சுற்றுப்பாதை, பூமிக்கு அருகில் வரும் காலம் உள்ளிட்டவற்றை வெளியிடுகிறது. 2024 பி.டி.5 என்ற விண்கல்லை 2024 ஆக., 7ல் கண்டறிந்தது. இதன் விட்டம் 37 அடி. இது அர்ஜுனா விண்கல் குடும்பத்தை சேர்ந்தது.

பூமி தன் அருகே சுற்றி வரும் விண்கற்கள், சிறுகோள் உள்ளிட்டவற்றை ஈர்த்து, அதை தற்காலிகமாக தன் சிறிய நிலவாக மாற்றுவது அறிவியல் வழக்கம்.

அதன்படி 2024 பி.டி.5 விண்கல் பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு, செப்., 29 - நவ., 25 வரை 34 லட்சம் கி.மீ., துாரத்தில், மணிக்கு 3540 கி.மீ, வேகத்தில் பூமியின் இரண்டாவது நிலவாக சுற்றி வரும். பின் பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து விலகி, 'அர்ஜுனா' விண்கல் குடும்ப சுற்றுப் பாதைக்கு சென்று விடும். இதன் அளவு மிகவும் சிறியது என்பதால் பூமியில் இருந்து பார்த்தால் தெரியாது.

இதற்கு முன்


1981, 2022ல் 2022 என்.எக்ஸ்1 என்ற சிறிய விண்கல் பூமியின் இரண்டாவது நிலவாக சில நாள் சுற்றி வந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us