UPDATED : அக் 25, 2024 12:00 AM
ADDED : அக் 25, 2024 09:48 AM
சேலம்:
தமிழக அரசின் சார்பில், பிரான்ஸ் கல்வி சுற்றுலா செல்ல, சேலம் மாவட்டத்தில் ஐந்து ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அரசு ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் வகையில், கனவு ஆசிரியர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில், வெளிநாடு செல்லும் கல்வி சுற்றுலாவுக்கு, 54 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில், வி.மேட்டுபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, கஞ்சநாயக்கன்பட்டி நடுநிலைப்பள்ளி ஆசிரியை கவுசல்யா, வேடப்பட்டி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் இளவரசன், பழனிபுரம் துவக்கப்பள்ளி ஆசிரியர் விஜயகுமார், வெள்ளாளப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் சூர்யபிரகாசம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், பிரான்ஸ் நாட்டுக்கு கல்வி சுற்றுலா செல்ல உள்ளனர்.