தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/திறன் மேம்பாட்டு உச்சி மாநாடு அடுத்த மாதம் 3 நாள் நடக்கிறது

திறன் மேம்பாட்டு உச்சி மாநாடு அடுத்த மாதம் 3 நாள் நடக்கிறது

திறன் மேம்பாட்டு உச்சி மாநாடு அடுத்த மாதம் 3 நாள் நடக்கிறது


UPDATED : அக் 08, 2026 07:45 PM

ADDED : அக் 08, 2026 07:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 07:45 PM ADDED : அக் 08, 2026 07:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு:
பெங்களூரில் அடுத்த மாதம் 3 நாட்கள், இரண்டாவது திறன் மேம்பாட்டு உச்சி மாநாடு நடக்க உள்ளது.

கர்நாடக அரசின் திறன் மேம்பாட்டு, தொழில் முனைவோர் மற்றும் வாழ்வாதார துறை சார்பில், அடுத்த மாதம் 3ம் தேதி முதல், 5ம் தேதி வரை மூன்று நாட்கள், 2வது பெங்களூரு திறன் மேம்பாட்டு உச்சி மாநாடு நடக்கவுள்ளது.

இதற்கான போஸ்டரை திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சரணபிரகாஷ் பாட்டீல், துறையின் முதன்மை செயலர் சுபோத் யாதவ், திறன் மேம்பாட்டு ஆணைய தலைவர் ரமண ரெட்டி, திறன் மேம்பாட்டு வளர்ச்சி ஆணைய தலைவர் சிவகாந்தம்மா நாயக், பெங்களூரு புனித வளனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் விக்டர் லோபோ ஆகியோர் வெளியிட்டனர்.

150 பேர் உரை

பின், சரணபிரகாஷ் பாட்டீல் அளித்த பேட்டி:

பெங்களூரு குமாரகிருபா சாலையில் உள்ள தி லலித் அசோக் ஹோட்டலில், அடுத்த மாதம் 3ம் தேதி முதல், 5ம் தேதி வரை, 2வது திறன் மேம்பாட்டு உச்சி மாநாடு நடக்கிறது. 'தொழிலாளர்கள் 2030: அளவு, அமைப்புகள், ஒருங்கிணைப்பு' என்ற தலைப்பில் நடக்கும் மாநாட்டை முதல்வர் சிவகுமார் துவக்கி வைக்கிறார்.

எதிர்கால மனிதவள மேம்பாடு, புதிய தொழில்நுட்ப பயிற்சி, உலகளாவிய வேலைவாய்ப்பு தகுதி, அரசு - தனியார் கூட்டாண்மை, உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் ஆகியவை பற்றி விவாதிப்பதே, இம்மாநாட்டின் முக்கிய நோக்கம். மூன்று நாட்கள் நடக்கும் மாநாட்டில், 6,000 பேர் கலந்து கொள்வர்.

நிடி ஆயோக் உறுப்பினர் பாலசுப்பிரமணியம், மிட்டி கபே நிறுவனர் அலினா ஆலம் உட்பட சர்வதேச மற்றும் தேசிய அளவிலான முன்னணி துறைகளின் வல்லுநர்கள், 150 பேர் பல அமர்வுகளில் உரையாற்ற உள்ளனர். 100க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் கூட்டாளர்களும், 50க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களும் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்த உள்ளனர்.

இளைஞர் மண்டலம்



இம்முறை வெறும் உரையாடல்களாக மட்டும் இல்லாமல், திறன் மேம்பாட்டு துறையில் உள்ள சவால்களுக்கு புதிய மற்றும் புதுமையான தீர்வை கண்டறிய இளைஞர்களுக்கு இடையே தொழில்நுட்ப போட்டிகள் நடக்க உள்ளன. மாணவர்கள், இளைஞர்கள் நேரடியாக தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவும், தங்கள் தொழில் வாய்ப்பை கண்டறியவும் இளைஞர் மண்டலம் உருவாக்கப்படும்.

திறன் மேம்பாடு, பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. அடுத்தகட்ட தொழில்நுட்பங்களை நேரடியாக நிபுணர்களிடம் இருந்து கற்றுகொள்ளும் வகையில் சிறப்பு பயிற்சி வகுப்புகளும் நடக்கும்.

இந்த மாநாட்டில் பங்கேற்க www.bengaluruskillssummit.com என்ற இணையமுகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us