UPDATED : அக் 01, 2024 12:00 AM
ADDED : அக் 01, 2024 02:10 PM

திருவண்ணாமலை:
சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியைச் சேர்ந்த, 42 பேர் அடங்கிய மாணவ - மாணவியர் குழுவினர், 500 கிராம் எடையில், 25,000 ரூபாய் செலவில் உருவாக்கிய சிறிய ரக செயற்கைக்கோளை, ஹீலியம் பலுான் மூலம் நேற்று வானில் பறக்க விட்டனர்.
சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி எனும் சி.ஐ.டி., கல்லுாரியைச் சேர்ந்த, 42 மாணவ - மாணவியர் அடங்கிய குழுவினர், குறைந்த செலவில் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இத்திட்டத்தில் காற்றின் ஈரப்பதம், தட்ப வெப்பநிலையை கண்டறிய, 25,000 ரூபாய் செலவில் தயாரித்த, 500 கிராம் எடை கொண்ட சிறிய ரக செயற்கைக்கோளை உருவாக்கி, அதை, ஹீலியம் பலுான் மூலம் வானில் பறக்க விடும் நிகழ்ச்சி, திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை நடந்தது.
இந்த பலுான், 20 கி.மீ., உயரம் வரை பறக்கும். அப்போது, அதிலுள்ள செயற்கைக்கோள் தொடர்ந்து மூன்று மணி நேரம் பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பும். மேலும், காற்றில் உள்ள ஈரப்பதம், தட்ப வெப்பநிலை ஆகியவற்றை கண்டறியும்.
சி.ஐ.டி., கல்லுாரி மாணவர்களின் இந்த முயற்சியை ஏராளமானோர் பார்வையிட்டனர்.