புதிய மாணவர்களுக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு
புதிய மாணவர்களுக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு
UPDATED : ஏப் 11, 2024 12:00 AM
ADDED : ஏப் 11, 2024 09:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்:
முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாக சேர்க்கப்பட்ட ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பூரண கும்ப மரியாதை உடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தலைமையாசிரியர் ஜோசப் விக்டோரியா ராணி தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் செல்வராணி முன்னிலை வகித்தார். ஆசிரியர் உமாதேவி அனைவரையும் வரவேற்றார். புதிதாக சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு பஜார் தெருவில் இருந்து மாலை அணிவித்து அழைத்து வந்து, ஆசிரியர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.
பரமக்குடி கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் தர்மராஜ், வட்டார கல்வி அலுவலர்கள் இந்திராகாந்தி,முருகேஸ்வரி ஆசிரியர்கள், மக்கள் பங்கேற்றனர்.