அப்துல் கலாம் பிறந்த நாள் விழா: மாணவர்களுக்கு பரிசளிப்பு
அப்துல் கலாம் பிறந்த நாள் விழா: மாணவர்களுக்கு பரிசளிப்பு
UPDATED : அக் 16, 2026 05:04 PM
ADDED : அக் 16, 2026 05:04 PM
பண்ருட்டி:
பண்ருட்டியில் ஏ.பி.ஜே., அப்துல் கலாம் சகாப்த எழுச்சி அறக்கட்டளை சார்பில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு அறக்கட்டளை தலைவர் சுதாகர் தலைமை தாங்கினார். சஞ்சீவிராயர், மாசிலாமணி , ராஜ்குமார், முத்துகுமார், மூர்த்தி முன்னிலை வகித்தனர். மனவளக்கலை கிருஷ்ணகுமார், யோகா பரிமளரங்கன், புவனேஸ்வரி, மகாலிங்கம் வரவேற்றனர்.
டி.எஸ்.பி., ரகுபதி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் ஆகியோர் அப்துல்கலாம் உருவபடத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
வியாபாரிகள் சங்க செயலாளர் ராஜா, கார்த்திக், அரிமா சங்க வீரப்பன், நகை வியாபாரிகள் சங்க சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் மல்லர் கம்பம் விளையாட்டு போட்டி, பள்ளி மாணவர்களுக்கு இடையே கட்டுரை, பேச்சு, ஒவிய போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மூர்த்தி நன்றி கூறினார்.
