தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அப்துல் கலாம் கனவு நிறைவேறும்: இஸ்ரோ விஞ்ஞானி நம்பிக்கை

அப்துல் கலாம் கனவு நிறைவேறும்: இஸ்ரோ விஞ்ஞானி நம்பிக்கை

அப்துல் கலாம் கனவு நிறைவேறும்: இஸ்ரோ விஞ்ஞானி நம்பிக்கை


UPDATED : ஆக 14, 2026 05:21 PM

ADDED : ஆக 14, 2026 05:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 14, 2026 05:21 PM ADDED : ஆக 14, 2026 05:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்:
இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என்கிற அப்துல்கலாம் கனவு விரைவில் நிறைவேறும் என இஸ்ரோ விஞ்ஞானி முரளி தெரிவித்தார்.

விழுப்புரத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு, இலவசமாக பயிற்சி அளிப்பதற்கான,ஸ்ரீ நேத்ராலயா அகாடமி திறப்பு விழா நடைபெற்றது.

இந்த மையத்தினை, இஸ்ரோ மூத்த விஞ்ஞானி முரளி திறந்து வைத்து பேசியதாவது:


அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கட்டணமின்றி ரொபாடிக் உள்ளிட்ட பயிற்சிகளை, இந்த மையத்தில் பெறலாம். இந்தியா வல்லரசு நாடாக வளர வேண்டும் என்கிற முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கனவு விரைவில் நிறைவு பெற முழுமையாக பாடுபடுவோம்.

வில்லேஜ் டெக்னாலஜிகல் ஸ்கூல் மற்றும் ஸ்ரீ நேத்ராலயா அகாடமி சார்பில், ஆண்டுதோறும் ஆயிரம் கிராமப்புற விஞ்ஞானிகளை உருவாக்கிட, திட்டமிடப்பட்டுள்ளது. இலவச பயிற்சி அளித்து, விஞ்ஞான நிறுவனங்களில் பயிற்சி அளிக்கவும் திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், அகாடமியின் நிர்வாகி பாலாஜி, வில்லேஜ் டெக்னாலஜிக்கல் ஸ்கூல் சேர்மன் பாலாஜி, நேருயுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் காந்தி, செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை ஐ.டி.ஐ., முதல்வர் சத்யராஜ், ஆலோசகர் முருகன், ஆசிரியர் அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us