அனைத்து பல்கலைகளிலும் தனி போலீஸ் ஸ்டேஷன் ஏ.பி.வி.பி., வலியுறுத்தல்
அனைத்து பல்கலைகளிலும் தனி போலீஸ் ஸ்டேஷன் ஏ.பி.வி.பி., வலியுறுத்தல்
UPDATED : டிச 30, 2024 12:00 AM
ADDED : டிச 30, 2024 08:51 AM
மதுரை:
சென்னை அண்ணா பல்கலையில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. அனைத்து பல்கலைகளிலும் தனி போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் (ஏ.பி.வி.பி.,) மாநில இணைச் செயலாளர் விஜயராகவன் வலியுறுத்தியுள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது:
பல்கலை வளாகத்திலேயே மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை ஏ.பி.வி.பி., தேசிய மாணவர் அமைப்பு கண்டிக்கிறது. சம்பந்தப்பட்ட நபருக்கு சரியான தண்டனை பெற்றுத் தரவேண்டும். மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளையும், அவர்களின் பின்னணியில் இருப்போரையும் உடனடியாக கைது செய்து தண்டிக்க வேண்டும். அனைத்துக்கும் மேலாக கல்லுாரி, பல்கலைகளில் படிக்கும் மாணவர்களுக்கு குறிப்பாக மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
அனைத்து பல்கலைகளிலும் தனி போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும். மேலும் தகுந்த நடவடிக்கையையும் எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.