UPDATED : அக் 26, 2026 06:00 PM
ADDED : அக் 26, 2026 06:01 PM
தேனி:
தேனி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் உலக டிராமா (அதிர்ச்சி) தினத்தை முன்னிட்டு விபத்து கால விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
முன்னேற்பாடு இன்று, உயிர் காப்பு நாளை என்ற தலைப்பில் விபத்து கால முதலுதவி, சிகிச்சை ஒத்திகை நடந்தன. கல்லுாரி முதல்வர் ரோகினி தேவி தலைமை வகித்து தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த டூவீலர் விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
ஆர்.எம்.ஓ., சிவக்குமார் முன்னிலை வகித்தார். ஏ.ஆர்.எம்.ஓ., ஈஸ்வரன், அவசர சிகிச்சை பிரிவு தலைவர் பாலசுப்பிரமணி, தேனி தீயணைப்பு நிலைய அலுவலர் பாலமுருகன், வீரர்கள் பங்கேற்றனர்.
மருத்துவமனை கட்டடத்தில் தீவிபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டிய தற்காப்பு ஏற்பாடுகள் குறித்து தீயணைப்பு வீரர்கள் விவரித்தனர். தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு (டி.ஏ.இ.ஐ.,) சார்பில் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
