UPDATED : ஜூலை 18, 2024 12:00 AM
ADDED : ஜூலை 18, 2024 09:13 AM
புதுச்சேரி:
யோகாவில் உலக சாத னைப் படைந்த மாணவர்கள் புதுச்சேரி சபாநாயகர் செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தென்காசி மாவட்டம், சிவகிரி பிராணா யோகா மையத்தை சேர்ந்ததேவதர்ஷன் அருண், வெங்கட்பிரபு, சேது சந்தோஷ்குமார் ஆகிய மூன்று மாணவர்கள் யோகாசனத்தில் புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.
மேலும், தரணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்களும், தளவாய்புரம் அருணாசல நாடார் துவக்கப் பள்ளி மாணவர்களும் சிறந்த யோகா மாணவர்களுக்கான விருதை பெற்றுள்ளனர்.
சாதனை மற்றும் விருது பெற்ற மாணவர்கள் அனைவரும் புதுச்சேரி சபாநாயகர் செல்வத்தை நேற்று நேரில் சாந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுடன் யோகா ஆசிரியர்கள் அருண்குமார், சிவகோவிந்த் மற்றும் புதுச்சேரி யோகா பயிற்சியாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.