UPDATED : ஜூலை 12, 2025 12:00 AM
ADDED : ஜூலை 12, 2025 09:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்:
சோழவந்தான் அருகே உடன் காட்டுப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை சீரமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
சவுந்தரபாண்டி என்பவர் கூறுகையில், அங்கன்வாடி மையமும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியும் ஒரே இடத்தில் உள்ளன. பல ஆண்டுகளாக பள்ளிக் கட்டடம் சீரமைக்கப்படாமல் பராமரிப்பின்றி உள்ளது. ஒருபுறம் மட்டுமே சுற்றுச்சுவர் உள்ளது. மற்றொருபுறம் திறந்த நிலையில் உள்ளது. இதனால் பள்ளிப் பாதுகாப்பின்றி உள்ளதுடன், விஷ ஜந்துகளால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலையும் உள்ளது. இதுபற்றி பலமுறை அதிகாரிகளிடம் எடுத்துக் கூறியும் பலனில்லை. மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.