தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆதிதிராவிட நல மாணவர் விடுதி வார்டன், சமையலர் சஸ்பெண்ட்

ஆதிதிராவிட நல மாணவர் விடுதி வார்டன், சமையலர் சஸ்பெண்ட்

ஆதிதிராவிட நல மாணவர் விடுதி வார்டன், சமையலர் சஸ்பெண்ட்


UPDATED : செப் 04, 2026 04:34 PM

ADDED : செப் 04, 2026 04:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 04, 2026 04:34 PM ADDED : செப் 04, 2026 04:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உளுந்துார்பேட்டை:
பாலி ஆதி திராவிட நல மாணவர் விடுதி வார்டன் மற்றும் சமையலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த பாலி கிராமத்தில் சமூக நீதித்துறை மாணவர் விடுதியில் 20 மாணவர்கள் மட்டுமே தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியில் பராமரிப்பதற்கு போதிய ஆட்கள் இல்லை. 3 பள்ளிகளுக்கு ஒரு வார்டன் என்ற கணக்கில் சுரேஷ்குமார் வார்டன் பொறுப்பாளராக இருந்து வருகிறார். குப்பன் என்கிற சமையலர் உள்ளார்.

ஆனால், மாணவர்களுக்கு சமைத்து தரக்கூடிய சமையல் உபகரணங்கள் இல்லை. இதனால், கடந்த ஒரு மாதமாக மாணவர்களுக்கு முறையாக உணவு வழங்கப்படாமல் இருந்து வருகிறது. மின்மோட்டார் பழுதை சரி செய்யாததால் குடிநீர் கூட கிடைப்பதில்லை. சமையலறை, அறைகள் அசுத்தமான நிலையில் பராமரிப்பின்றி இருந்தது.

நேற்று முன்தினம் விடுதி மாணவர்கள் வழக்கம் போல் உணவு இல்லாததால் பசியோடு தவித்தனர். இதனையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களில் சிலர், ஓட்டலில் இருந்து மாணவர்களுக்கு பரோட்டா வாங்கிக் கொடுத்தனர்.

இது குறித்து 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் பேரில் மாவட்ட ஆதிதிராவிடர் பிரிவு சப் கலெக்டர் சரவணகுமார், இச்சம்பவத்திற்கு காரணமான வார்டன் சுரேஷ்குமார் மற்றும் சமையலர் குப்பன் ஆகியோரை நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். அவர்களுக்கு பதிலாக விடுதி வார்டனாக வினோத், சமையலராக அன்பழகனையும் நியமனம் செய்தார்.

அதை தொடர்ந்து விடுதியை ஆய்வு செய்து, உடனடியாக விடுதி அறைகள் சுத்தம் செய்யப்பட்டு, பழுதான மின் மோட்டார் சரி செய்யப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

மாணவர்களுக்கு உணவு சமைப்பதற்கு தேவையான மளிகைப் பொருட்கள், காய்கறிகள் ஆகியவை கொண்டு வரப்பட்டு மாணவர்களுக்கு சமைத்து விநியோகிக்கப்பட்டது.

விடுதி மாணவர்களுக்கு சப் கலெக்டர் முயற்சியால் நேற்றுதான் பாய், பெட்ஷீட், தலையாணை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us