sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஐ.எம்.யூ., அட்மிஷன்

/

ஐ.எம்.யூ., அட்மிஷன்

ஐ.எம்.யூ., அட்மிஷன்

ஐ.எம்.யூ., அட்மிஷன்


UPDATED : ஏப் 11, 2024 12:00 AM

ADDED : ஏப் 11, 2024 05:44 PM

Google News

UPDATED : ஏப் 11, 2024 12:00 AM ADDED : ஏப் 11, 2024 05:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னையை தலைமை இடமாகக் கொண்டு, மத்திய பல்கலைக்கழக அந்தஸ்துடன் கடந்த 2008ம் ஆண்டு, இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.

கல்வி வளாகங்கள்:
சென்னை, கொச்சி, விசாகப்பட்டினம், நவி மும்பை, மும்பை துறைமுகம், கொல்கத்தா ஆகிய ஆறு இடங்களில் இப்பல்கலைக்கழகத்தின் வளாகங்கள் செயல்படுகின்றன. இவை தவிர, நாடு முழுவதும் 17 கல்வி நிறுவனங்கள் இப்பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் செயல்படுகிறது.

இளநிலை பட்டப்படிப்புகள்:

பி.டெக்., - நேவல் ஆர்கிடெக்ச்சர் மற்றும் ஷிப் பில்டிங் இன்ஜினியரிங்
பி.டெக்., - மரைன் இன்ஜினியரிங்
பி.டெக்., - நேவல் ஆர்கிடெக்ச்சர் மற்றும் ஓசன் இன்ஜினியரிங்
பி.எஸ்சி., - நாட்டிக்கல் சயின்ஸ்
பி.பி.ஏ., - லாஜிஸ்டிக்ஸ், ரீடெயிலிங் மற்றும் இ-காமர்ஸ்
பி.பி.ஏ., - மேரிடைம் லாஜிஸ்டிக்ஸ்

முதுநிலை பட்டப்படிப்புகள்:


எம்.டெக்., - நேவல் ஆர்கிடெக்ச்சர் மற்றும் ஓசன் இன்ஜினியரிங்
எம்.டெக்., - டிரெட்ஜிங் மற்றும் ஹார்பர் இன்ஜினியரிங்
எம்.டெக்., - மரைன் டெக்னாலஜி
எம்.பி.ஏ., - இன்டர்நேஷனல் டிரான்ஸ்போர்டேஷன் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட்
எம்.பி.ஏ., - போர்ட் மற்றும் ஷிப்பிங் மேனேஜ்மெண்ட்

டிப்ளமா படிப்புகள்:


டி.என்.எஸ்., - டிப்ளமா இன் நாட்டிக்கல் சயின்ஸ்
பி.ஜி.டி.எம்.இ., - போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் மரைன் இன்ஜினியரிங்

தகுதிகள்:

படிப்பிற்கு ஏற்ப கல்வித் தகுதிகள் மாறுபடும். குறிப்பாக, பி.டெக்., பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற, 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுடன் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உடல்தகுதியும், வயதுவரம்பும் உண்டு.

சேர்க்கை முறை:

ஐ.எம்.யு.,-சி.இ.டி., எனும் பொது நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

தேர்வு மையங்கள்:

கம்ப்யூட்டர் வாயிலாக நடைபெறும் இந்நுழைவுத்தேர்வுக்கான மையங்கள், சென்னை, கோவை, சேலம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், பெங்களூரு உட்பட 86 நகரங்களில் அமைக்கப்படுகின்றன.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

மே 5

நுழைவுத்தேர்வு நாள்:

ஜூன் 8

விபரங்களுக்கு:

www.imu.edu.in







      Dinamalar
      Follow us