UPDATED : ஜூலை 23, 2026 04:08 PM
ADDED : ஜூலை 23, 2026 04:09 PM
கோவை:
வேளாண் பல்கலை மற்றும் அண்ணாமலைப் பல்கலை வேளாண் பிரிவு 2026 - 27 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. ஆன்லைனில் 17 பாடப்பிரிவுகளுக்கு, 26 ஆயிரத்து 709 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் 24 ஆயிரத்து, 435 விண்ணப்பங்கள் தகுதி பெற்றன.
அரசு கல்லுாரிகளில், 2,516 இடங்களும், அதன் இணைப்பு கல்லுாரிகளில் அரசு இடஒதுக்கீடான, 3,051 இடங்களும், அண்ணாமலை பல்கலையின் வேளாண்மை பிரிவுகளுக்கு, 340 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
20ம் தேதி 7.5 சதவீத அரசு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடந்தது. பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது. 1400 மாணவர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.
பங்கேற்ற மாணவர்களுக்கு பல்கலை துணைவேந்தர் (பொ) சுப்பிரமணியம், அட்மிஷன் கடிதம் வழங்கி வாழ்த்தினார். பல்கலை முதன்மையர்கள், இயக்குனர்கள் பேராசிரியர்கள் பங்கேற்றனர். கலந்தாய்வு வரும் 25ம் தேதி வரை நடக்கிறது.
