அரசு கலைக்கல்லூரியில் சிறப்பு கலந்தாய்விற்கான மாணவர் சேர்க்கை
அரசு கலைக்கல்லூரியில் சிறப்பு கலந்தாய்விற்கான மாணவர் சேர்க்கை
UPDATED : ஜூன் 01, 2024 12:00 AM
ADDED : ஜூன் 01, 2024 08:36 AM
குளித்தலை:
டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரி சிறப்பு கலந்தாய்விற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
தமிழக அரசு உயர் கல்வித்துறை அறிவுறுத்தலின் படி குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக்கல்லூரியில் உள்ள இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான சிறப்பு கலந்தாய்வு கல்லூரி முதல்வர் அர. ரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
இதில் முன்னாள் ராணுவ வீரரின் பிள்ளைகள் மற்றும்விளையாட்டு வீரர்கள் உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கான இந்த சிறப்புக் கலந்தாய்வில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் மாணவர்களின் சேர்க்கை நடைபெற்றது இதில் கல்லூரி மாணவர் சேர்க்கையை குழு பேராசிரியர்கள் மின்னனுவியல் துறை தலைவர் அன்பரசு இயற்பியல் துறை தலைவர் ராமநாதன் கணித துறைத் தலைவர் உமாதேவி உணவு மற்றும் ஊட்டச்சத்துவியல் துறை தலைவர் சக்திவேல் ஆகியோர் கொண்ட குழுவினர் சிறப்பு கலந்தாய்வில் தகுதி உடைய மாணவர்களை தேர்வு செய்தனர்.
இதனை அடுத்து முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 10ஆம் தேதி தொடங்கி11 12 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
இதில் 10ம் தேதி இளம் வணிகவியல் வணிக நிர்வாகவியல் வணிக கணினி பயன்பாட்டியல் துறைக்கும் 11ஆம் தேதி இளம் அறிவியல் பாடங்களான மின்னணுவியல் இயற்பியல் வேதியியல் விலங்கியல் தாவரவியல் கணினி துறை ,கணிதம் கணினி பயன்பாட்டியல் மற்றும் 12ஆம் தேதி இளங்கலை தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடக்க உள்ளது என கல்லூரி முதல்வர் அர.ரவிச்சந்திரன் தெரிவித்தார்.