UPDATED : ஜூலை 02, 2024 12:00 AM
ADDED : ஜூலை 02, 2024 09:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
கோவை, புலியகுளம் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நேற்று முன் தினம் நடந்தது. 240 இடங்களில், இதுவரை 160 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். 57 காலியிடங்கள் உள்ளன.
கல்லூரி முதல்வர் வீரமணி கூறுகையில், இனவாரியான இடஒதுக்கீட்டில் குறிப்பிட்ட பிரிவில் மட்டுமே காலியிடங்கள் உள்ளன. பிற பிரிவுகளில், மாணவிகள் காத்திருக்கும் சூழல் உள்ளது. இந்நிலையில், இப்பிரிவில் மாணவிகள் சேராதபட்சத்தில், இந்த இடங்கள் இறுதி நாளில் ஓபன் கோட்டாவாக அறிவிக்கப்பட்டு, காத்திருக்கும் மாணவிகளுக்கு வழங்கப்படும், என்றார்.