அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை; முதல்வர் அறிவிப்பு
அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை; முதல்வர் அறிவிப்பு
UPDATED : ஜூன் 07, 2026 01:21 PM
ADDED : ஜூன் 07, 2026 01:22 PM
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பாலாஜி பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஓசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரியில், நடப்பாண்டிற்கான முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
டிப்ளமோ மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் மற்றும் இன்பர்மேசன் டெக்னாலஜி போன்ற பாட பிரிவுகளுக்கு சேர்க்கை நடக்கிறது.
எனவே, பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் முதலாமாண்டிலும், பிளஸ் 2, ஐ.டி.ஐ., படித்த மாணவர்கள் இரண்டாமாண்டிலும் சேரலாம்.
முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு, பாரத பிரதமரின் ஆயூஷ்மான் பாரத் திட்டத்தில், இலவச மருத்துவ காப்பீடு திட்டம், டைட்டன் கல்வி உதவித்தொகை, டிரஸ்ட் கல்வி உதவித்தொகை மற்றும் மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை, இறுதியாண்டு மாணவர்களுக்கு எம்.என்.சி., கம்பெனிகள் மூலம் வேலைவாய்ப்பு, யோகா மற்றும் தியான பயிற்சி வகுப்புகள், தொழில் முனைவோர் கருத்தரங்கம் போன்ற பயிற்சிகள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
