தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐஐஎம்-ல் மாணவர் சேர்க்கை

ஐஐஎம்-ல் மாணவர் சேர்க்கை

ஐஐஎம்-ல் மாணவர் சேர்க்கை


UPDATED : அக் 25, 2025 10:50 AM

ADDED : அக் 25, 2025 10:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 25, 2025 10:50 AM ADDED : அக் 25, 2025 10:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
இந்திய மேலாண்மைக் கழகம் (IIM) திருச்சிராப்பள்ளி தனது சென்னை வளாகத்தில் பகுதி நேர எம்பிஏ (MBA) பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை அறிவித்துள்ளது. 21 மாதங்கள் நடைபெறும் இந்தப் படிப்பு, பணிபுரிவோர் மற்றும் தொழில்முனைவோரின் வசதிக்காக வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும்.

இளநிலை பட்டப்படிப்பு மற்றும் குறைந்தது 3 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையோர். மேலும், தனியார், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் நிர்வாகிகளும் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிகள் இப்பாடத்திட்டத்திற்கும் பொருந்தும்.

இந்தப் படிப்பு, பணியில் இடையூறின்றி சர்வதேச தரத்திலான எம்பிஏ பட்டம் பெறுவதற்கும் மேலாண்மை திறன்களை மேம்படுத்துவதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று ஐஐஎம் திருச்சிராப்பள்ளி இயக்குநர் பவன்குமார் சிங் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்கள் www.iimtrichy.ac.in/pgpbm மின்னஞ்சல் (admissions_pgpbm@iimtrichy.ac.in) மூலமாகவும் பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us