UPDATED : ஜூன் 04, 2024 12:00 AM
ADDED : ஜூன் 04, 2024 10:57 AM
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ., மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2024ம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார், சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்காக அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், மாவட்ட திறன் பயிற்சி அலுவலங்களில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையங்கள் பட்டியல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர 8 மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டண தொகை 50 ரூபாய் செலுத்த வேண்டும். வரும் 7ம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இணையத்தில் வெளியிடப்படும்.
தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கைக்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்வதில் சந்தேகம் ஏற்பட்டால் govtvpmdtadgmail.com என்ற முன்னஞ்சல் முகவரியிலும், 04146-294989 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.