தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளிகளில் ஆர்.டி.இ., சட்டத்தில் மாணவர்கள் சேர்க்கை துவக்கம்

பள்ளிகளில் ஆர்.டி.இ., சட்டத்தில் மாணவர்கள் சேர்க்கை துவக்கம்

பள்ளிகளில் ஆர்.டி.இ., சட்டத்தில் மாணவர்கள் சேர்க்கை துவக்கம்


UPDATED : ஏப் 22, 2026 02:32 PM

ADDED : ஏப் 22, 2026 02:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 22, 2026 02:32 PM ADDED : ஏப் 22, 2026 02:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:
தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாணவர்கள் சேர்க்கை துவங்கி உள்ளது.

மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் 25 சதவீத மாணவர்கள் சேர்க்கை துவங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் மே 18 வரை rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும், விபரங்களுக்கு பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சி.இ.ஓ., அலுவலகம், அல்லிநகரத்தில் உள்ள டி.இ.ஓ., அலுவலகங்களை அணுகலாம். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர், சிறப்பு பிரிவினர், நலிவடைந்த பிரிவினர் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் போது மாணவர்கள் புகைப்படம், பிறப்பு சான்றிதழ், அடையாள அட்டை உள்ளிட்டவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தயக்கம்


கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மாணவர்கள் சேர்க்கை ஏப்., 20 முதல் துவங்கி உள்ளது. ஆனால், இச்சேர்க்கை அறிவிப்பு பற்றி மாவட்ட கல்வித்துறை, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்புகள் வெளியிட அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us