UPDATED : மே 09, 2026 05:01 PM
ADDED : மே 09, 2026 05:08 PM
தொண்டாமுத்தூர்:
தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், இந்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது.
தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், பி.காம்., (பி.ஏ.,), பி.காம்., (சி.ஏ.,), பி.ஏ., (பொருளாதாரம்), பி.ஏ., (ஆங்கிலம்), பி.எஸ்.சி., கணிதம், பி.எஸ்.சி., கணினி அறிவியல் ஆகிய 7 பாடப்பிரிவுகள் உள்ளன.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில், மேற்கண்ட பாடப்பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள், தொண்டாமுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் உள்ள மாணவர் சேர்க்கை உதவி மையம் மூலமும், www.tngasa.in என்ற இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கு, வரும் 29ம் தேதி இறுதி நாளாகும். மாணவர் சேர்க்கை உதவி மையம் மூலம் விண்ணப்பிக்க பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியருக்கு 50 ரூபாயும், எஸ்.சி., மற்றும் எஸ்.டி, மாணவ, மாணவியர்களுக்கு 2 ரூபாயும் கட்டணமாக பெறப்படும் என, கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
