UPDATED : மே 31, 2024 12:00 AM
ADDED : மே 31, 2024 10:52 AM

திருச்செங்கோடு :
திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், எலச்சிபாளையம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதியில், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்., துறை அரசு முதன்மை செயலாளர் செந்தில்குமார், நாமக்கல் கலெக்டர் உமா முன்னிலையில், வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.
திருச்செங்கோடு பி.டி.ஓ., அலுலகத்தில், முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் மைய பொறுப்பாளர்களுக்கான சமையல் பயிற்சி முகாம் நடந்தது. தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்., துறை, அரசு முதன்மை செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.
அப்போது, காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவுகளை தரமாக வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.தொடர்ந்து, திருச்செங்கோடு நகராட்சி, கூட்டப்பள்ளியில், நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், பதுமை மகளிர் சுய உதவிக்குழுவினர் துணிப்பை தயாரித்தல், ஆயத்த ஆடை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வருவதை பார்வையிட்டார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மகளிர் திட்ட அலுவலர் செல்வராசு, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.