UPDATED : செப் 08, 2024 12:00 AM
ADDED : செப் 08, 2024 10:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனேஸ்வரம்:
குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கும் அக்னி -4 ரக ஏவுகணை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.
டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவம் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு பல்வேறு தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக அக்னி ரக ஏவுகணைகளை தயாரித்து விண்ணில் சோதனை நடத்தி வருகிறது.
இந்நிலையில் நம் ராணுவத்தை மேம்படுத்தும் திட்டத்தின்கீழ் அக்னி 4 ரக ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு ஒடிசாவில் உள்ள சந்திப்பூர் ஒருங்கிணைந்த ஏவுதளத்தில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது அப்போது இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.