UPDATED : ஜூலை 22, 2024 12:00 AM
ADDED : ஜூலை 22, 2024 09:31 AM

கோவை:
தமிழ்நாடு வேளாண் பல்கலையில், 7.5 சதவீத இடஒதுக்கீடு பொதுப்பிரிவின் கீழ், இளமறிவியல் பிரிவில் உள்ள காலியிடங்களுக்கு, மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் சமர்ப்பிப்பு, 22ம் தேதி நடைபெறவுள்ளது.
இச்சான்றிதழ் சரிபார்ப்பு மொத்தம், 200 இடங்களுக்கு நடைபெறவுள்ளது. தற்காலிக சேர்க்கை தரவரிசை மதிப்பெண், விருப்பப்பாடம், சாதி இடஒதுக்கீடு அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.
தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், பத்தாம் வகுப்பு, பிளஸ்2 மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ் உடன் 22ம் தேதி வேளாண் பல்கலையில், அண்ணா அரங்கில் நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று, சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல், https://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

