UPDATED : செப் 06, 2024 12:00 AM
ADDED : செப் 06, 2024 10:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
தமிழ்நாடு வேளாண் பல்கலையின் 44வது பட்டமளிப்பு விழா வரும் 9ம் தேதி நடக்கிறது.
காலை 10:30 மணிக்குத் துவங்கும் விழாவுக்கு, கவர்னர் ரவி தலைமை வகிக்கிறார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர் செல்வம் பரிசுகள், பதக்கங்களை வழங்குகிறார். மத்திய அரசின் பயிர் ரகங்கள் மற்றும் உழவர் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் திரிலோச்சன் மஹாபத்ரா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். விழாவில், மொத்தம் 9,526 மாணவர்கள் இளம் அறிவியல், முதுநிலை பட்டமேற்படிப்படிப்பு, முனைவர் பட்டங்கள் பெறவுள்ளனர்.