sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ வேளாண்மை படிப்புகள்

வேளாண்மை படிப்புகள்

வேளாண்மை படிப்புகள்


UPDATED : மே 31, 2024 12:00 AM

ADDED : மே 31, 2024 06:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 31, 2024 12:00 AM ADDED : மே 31, 2024 06:18 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் 19 உறுப்பு கல்லூரிகள், 38 ஆராய்ச்சி நிலையங்கள், 28 தனியார் கல்லூரிகள் செயல்படுகின்றன. இவற்றில், 14 இளநிலை பட்டப்படிப்புகள், 33 முதுநிலை பட்டப்படிப்புகள், 28 ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்படுகின்றன.
பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் உள்ள இடங்கள், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை கலந்தாய்வு வாயிலாக நிரப்பப்படுகின்றன.

இளநிலை பட்டப்படிப்புகள்:
பி.எஸ்சி.,-(ஹானர்ஸ்) அக்ரிகல்ச்சர், பி.எஸ்சி., -(ஹானர்ஸ்) ஹார்ட்டிகல்ச்சர், பி.எஸ்சி., -(ஹானர்ஸ்) புட், நியூட்டிரிஷன் அண்ட் டயட்டிக்ஸ், பி.எஸ்சி., -(ஹானர்ஸ்) பாரஸ்ட்ரி, பி.எஸ்சி., -(ஹானர்ஸ்) செரிகல்ச்சர், பி.டெக்., -அக்ரிகல்ச்சர் இன்ஜினியரிங், பி.டெக்.,-பயோடெக்னாலஜி, பி.எஸ்சி.,-(ஹானர்ஸ்) அக்ரிபிசினஸ் மேனேஜ்மெண்ட், பி.டெக்.,-புட் டெக்னாலஜி, பி.டெக்.,-எனர்ஜி அண்ட் என்விரான்மென்டல் இன்ஜினியரிங், பி.டெக்., - பயோஇன்பர்மேடிக்ஸ், பி.டெக்,, - அக்ரிகல்ச்சுரல் இன்பர்மேஷன் டெக்னாலஜி. அக்ரிகல்ச்சர் மற்றும் ஹார்ட்டிகல்ச்சர் படிப்புகள் தமிழ் வழியிலும் வழங்கப்படுகின்றன.
கால அளவு:
4 ஆண்டுகள்
கல்வித்தகுதி:
12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டும். சில படிப்புகளுக்கு கணிதம் மற்றும் உயிரியல் பாடங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும் சில படிப்புகளில், தொழில்பிரிவு மாணவர்களும் சேரலாம். பொதுப்பிரிவினர் 4 முதன்மை பாடங்களில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களும், பி.சி., மற்றும் பி.சி.எம்., பிரிவினர் குறைந்தது 50 சதவீத கூட்டு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அதேபோல், எம்.பி.சி., மற்றும் டி.என்.சி., பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்களும், எஸ்.சி., எஸ்.சி.ஏ., மற்றும் எஸ்.டி., பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தாலும் போதும்.
மாணவர் சேர்க்கை முறை:
மாணவர்கள் 12ம் வகுப்பில் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஆன்லைன் வாயிலாக மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும். விளையாட்டு பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர், என்.ஆர்.ஐ., பிரிவினர் ஆகியோருக்கான இடங்கள், அரசு பள்ளி ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் இதர சிறப்பு ஒதுகீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு பல்கலைக்கழக வளாகத்தில் நேரடியாக நடைபெறும். விண்ணப்பிக்கும் முறை:
பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://tnau.ac.in/ugadmission/ எனும் பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஜூன் 6

விபரங்களுக்கு:
இணையதளம்: www.tnau.ac.inஇ-மெயில்: ugadmissions@tnau.ac.inதொலைபேசி: 9488635077, 9486425076

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us