UPDATED : செப் 05, 2026 01:15 PM
ADDED : செப் 05, 2026 01:17 PM
அ நிறம் | அளவு
கோவை:
வேளாண் பல்கலை சார்பில், நாட்டு நலப்பணி சிறப்பு முகாம், பேரூர் தாலுகா, தென்கரையில் துவங்கியது.
முகாமை துவங்கி வைத்த துணைவேந்தர் ரவீந்திரன், ''விளைச்சலையும், பண்ணை வருவாயையும் அதிகரிக்க, நவீன வேளாண் தொழில்நுட்பங்களை விசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும்,'' என்றார்.
மாணவர் நல மையத்தின் டீன் பாலசுப்பிரமணியன், வேளாண் இன்ஜி. கல்லுாரி டீன் ராஜ்குமார், தென்கரை பஞ்சாயத்து தலைவர் மகாலட்சுமி பேசினர். பேரூர் தாலுகாவில் 7 கிராமங்களை தத்தெடுத்து, 600 மாணவர்கள் 7 நாட்கள் தங்கி நாட்டு நலப்பணி செய்ய உள்ளனர்.
ரத்த தானம், டெங்கு தடுப்பு, மது ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு, உறுப்பு தானம் ஆகிய சமூக பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவர்.
