பள்ளி திறப்பை முன்னிட்டு ஸ்கூல்பேக் விற்பனை விறுவிறு
பள்ளி திறப்பை முன்னிட்டு ஸ்கூல்பேக் விற்பனை விறுவிறு
UPDATED : மே 27, 2024 12:00 AM
ADDED : மே 27, 2024 10:45 AM

பொள்ளாச்சி:
பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், ஸ்கூல் பேக், லன்ச் பாக்ஸ் விற்பனை விறுவிறுப்பாக நடக்கிறது.
தமிழகம் முழுவதும், கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. அவ்வகையில், பொள்ளாச்சி நகரில், பள்ளிகள் திறப்பதையொட்டி, கடைகளில் ஸ்கூல் பேக், லன்ச் பேக், நோட்டு, புத்தகம், வாட்டர் பாட்டில், லஞ்ச் பாக்ஸ், பள்ளி சீருடை உள்ளிட்டவை அதிகளவில் தருவிக்கப்பட்டு வருகின்றன.
இது ஒருபுறமிருக்க, சில கடைக்காரர்கள், சலுகைகளைச் சுட்டிக்காட்டி, நகரில் ஆங்காங்கே விளம்பர பிளக்ஸ் பேனர் அமைத்தும் வருகின்றனர். அதன்படி, கடைகளில், மாணவ, மாணவியரை கவரும் வகையில், பேபி பேக், ஸ்கொயர் பேக், டபுள் ேஷால்டர் பேக், சிங்கிள் ேஷால்டர் பேக், ரெக்சின், ஜீன்ஸ் துணி, காட்டன் துணியாலான பேக்குகள் விற்பனை சூடு பிடித்துள்ளது. குறிப்பாக, எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளுக்காக பல்வேறு உயிரினங்களை உள்ளடக்கி கார்ட்டூன் படங்கள் அச்சிடப்பட்ட பேக் அதிகம் காணப்படுகின்றன.
வியாபாரிகள் கூறுகையில், இன்னும் இரு வாரத்தில் பள்ளிகள் திறக்க உள்ளதால் முன்கூட்டியே பலரும் ஸ்கூல் பேக், லன்ச் பேக் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். சில கடைகளில் வழக்கத்துக்கு மாறாக அதிகளவில் பேக்குகள் தருவிக்கப்பட்டுள்ளது, என்றனர்.