sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களின் முதல் தேர்வாகும் ஏ.ஐ., கணினி படிப்புகள்

மாணவர்களின் முதல் தேர்வாகும் ஏ.ஐ., கணினி படிப்புகள்

மாணவர்களின் முதல் தேர்வாகும் ஏ.ஐ., கணினி படிப்புகள்


UPDATED : மே 27, 2026 10:26 AM

ADDED : மே 27, 2026 10:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 27, 2026 10:26 AM ADDED : மே 27, 2026 10:28 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கல்லுாரிகளில் 2026 - 27 கல்வியாண்டுக்கான சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. செயற்கை நுண்ணறிவு, உறுதியான வேலைவாய்ப்பு, அதிக சம்பளம் உள்ளிட்ட காரணங்களை மையமாகக் கொண்டு, புதிய தொழில்நுட்ப படிப்புகளை மாணவர்கள் அதிகம் தேர்வு செய்து வருகின்றனர்.

ஏ.ஐ., தொடர்பான படிப்புகள் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் மிகுந்த கவனம் பெற்றுள்ளன. கணினி, வணிக மேலாண்மை, கேட்டரிங் சயின்ஸ் தொடர்பான படிப்புகள் வேலைவாய்ப்பை விரைவாக பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை மாணவர்களிடையே அதிகரித்துள்ளது.

கோர் இன்ஜினியரிங்குக்கு தொடரும் வரவேற்பு
ராஜாராம், இயக்குனர், ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி:

நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும், கோர் இன்ஜினியரிங் துறையின் தேவை குறையாது. அடிப்படை பொறியியல் அறிவு இருந்தால், புதிய தொழில்நுட்பங்களை எளிதாகக் கற்றுக்கொள்ள முடியும். கோர் இன்ஜினியரிங் உடன் ஏ.ஐ., ஐ.ஒ.டி., ரோபோட்டிக்ஸ் போன்ற தொழில்நுட்ப திறன்களையும் கூடுதலாக கற்றுக்கொள்ள மாணவர்கள் விரும்புகின்றனர்.

இதற்கேற்ப, நவீன தொழில்நுட்பங்களை கற்றுத்தரும் கல்லுாரிகள் மற்றும் அங்குள்ள தொழில்நுட்ப வசதிகளை பார்த்தே மாணவர்கள் சேருகின்றனர். இ.இ.இ., இ.சி.இ., மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பொறியியல் படிப்புகளுக்கு சமமான வரவேற்பு உள்ளது. அடுத்தபடியாக, ஏ.ஐ., மெசின் லேர்னிங், ஏ.ஐ., டேட்டா சயின்ஸ் படிப்புகளை மாணவர்கள் அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர்.

கணினி படிப்புகளின் ஆதிக்கம்
சுந்தரராமன், சி.இ.ஓ., ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள்:

கலை அறிவியலில், கணினி சார்ந்த படிப்புகளுக்கு மாணவர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. ஐ.டி., படிப்புகளையும் மாணவர்கள் விரும்புகின்றனர். பி.பி.ஏ., மற்றும் பிஸ்னஸ் அனலிடிக்ஸ் போன்ற சில படிப்புகள் தவிர, மற்ற வணிக படிப்புகளுக்கு வரவேற்பு குறைவாக உள்ளது. எதிர்பார்த்ததை விட கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புக்கு அதிக வரவேற்பு உள்ளது. அனைத்து பாடங்களிலும் கல்லுாரிகள் ஏ.ஐ., தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து வருகின்றன.

இன்டகிரேடட் ஏ.ஐ., படிப்புகளில் ஆர்வம்
விமல், ஸ்கூல் ஆப் கம்ப்யூட்டிங், கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரி:

புதிய தொழில்நுட்ப படிப்புகளுக்கு மட்டுமின்றி, கோர் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளன. இந்தாண்டு, ஏ.ஐ., மெசின் லேர்னிங், சைபர் செக்யூரிட்டி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், கணினி அறிவியல் படிப்புகளை மாணவர்கள் அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர்.

அனைத்து துறைகளிலும் ஏ.ஐ., பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், முதல் செமஸ்டர் முதலே ஏ.ஐ., தொழில்நுட்பங்களை கற்றுத்தரும் இன்டகிரேடட் ஏ.ஐ., பொறியியல் படிப்புகளையே மாணவர்கள் விரும்பி தேர்ந்தெடுக்கின்றனர்.

கேட்டரிங் படிப்பிற்கு மீண்டும் மவுசு
சிவக்குமார், முதல்வர், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி:

விரும்பிய படிப்பை மட்டுமின்றி, கல்லுாரியின் ரேங்கிங், வசதிகள், ஒழுக்கம் போன்ற அம்சங்களையும் பார்த்தே கல்லுாரிகளை தேர்வு செய்கின்றனர்.

கடந்தாண்டுகளை விட அடிப்படை அறிவியல் படிப்புகளுக்கும் சற்றே வரவேற்பு அதிகரித்துள்ளது. பி.பி.ஏ., லாஜிஸ்டிக்ஸ், பயோடெக்னாலஜி படிப்புகளையும் மாணவர்கள் அதிகளவில் தேர்வு செய்துள்ளனர்.

கொரோனாவிற்கு பின் சற்றே குறைந்திருந்த கேட்டரிங் படிப்புகளுக்கு மீண்டும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. புதிதாக துவங்கப்பட்டுள்ள ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் படிப்புகளையும் மாணவர்கள் விரும்பி தேர்ந்தெடுத்துள்ளனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us