UPDATED : ஜூலை 24, 2025 12:00 AM
ADDED : ஜூலை 24, 2025 08:02 AM
பெரும்பாக்கம்:
பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், நேற்று தமிழ் ஆசிரியர்களுக்கான, செயற்கை நுண்ணறிவு உலகில் செம்மொழி தமிழ் பயிலரங்கம் துவக்க விழா, நேற்று நடந்தது.
இதில், நிறுவன இயக்குனர் சந்திரசேகரன் பேசியதாவது:
இந்நிறுவனம், தனது புத்தாக்க மைய பிரிவின் வாயிலாக, மொபைல் போன் செயலிகள், செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் ஒலி நுால்கள், சங்க இலக்கியங்களின் குறுங்காணொளிகளை உருவாக்கி, புதுமையை வரவேற்பதில் முன்னோடியாக திகழ்கிறது.
இது குறித்த பயிற்சியை தமிழாசிரியர்களுக்கு வழங்கினால், ஆயிரக்கணக்கான மாணவர்களை போய் சேரும். எனவே தான், பேராசிரியர்களுக்கு இப்பயிலரங்கம் நடக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
பென்சில்வேவியா பல்கலை தெற்காசியவியல் துறை பேராசிரியர் அரங்கநாதன், குழந்தை நிலையில் உள்ள தமிழுக்கான செயற்கை நுண்ணறிவு, வருங்காலத்தில் வானளாவிய நிலையை எட்டும், எனப் பேசினார்.
இதில், நிறுவன பேராசிரியர்கள், தமிழ் ஆராய்ச்சி அலுவலர்கள் உட்பட தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம், தெலுங்கானாவை சேர்ந்த, 45 தமிழாசிரியர்கள் பங்கேற்றனர். இப்பயிலரங்கம், வரும் 29ம் தேதி வரை, ஏழு நாட்கள், 45 அமர்வுகளாக நடைபெறும்.