தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏ.ஐ., ஆராய்ச்சி மையம் சி.ஐ.டி., கல்லூரியில் துவக்கம்

ஏ.ஐ., ஆராய்ச்சி மையம் சி.ஐ.டி., கல்லூரியில் துவக்கம்

ஏ.ஐ., ஆராய்ச்சி மையம் சி.ஐ.டி., கல்லூரியில் துவக்கம்


UPDATED : அக் 31, 2026 02:10 PM

ADDED : அக் 31, 2026 02:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 02:10 PM ADDED : அக் 31, 2026 02:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
கோயமுத்துார் தொழில்நுட்ப கல்லூரியில் (சி.ஐ.டி.,), ஏ.ஐ., ஆராய்ச்சி மற்றும் பொறியியல் மைய துவக்க விழா நடந்தது.

மையத்துக்கு கல்லூரியின் 4 முன்னாள் மாணவர்கள் அடங்கிய ஆலோசனை குழு அமைத்துள்ளனர். இக்குழு மாணவர்களுக்கு ஏ.ஐ., கல்வி, ஆராய்ச்சிக்கு வழிகாட்டும். 750 மாணவர்களுக்கு தொழில்துறைக்கு தேவையான, ஏ.ஐ., பாடங்கள் அறிமுகப்படுத்துகிறது.

கல்லூரி முன்னாள் மாணவியும், டாடா டெக்னாலஜிஸ் நிறுவன சி.டி.ஓ.,வுமான சுகன்யா பேசுகையில், “ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் வாய்ப்பும், ரிஸ்க்கும் உள்ளது. தகவல் தொழில்நுட்பத்தில் பெரிய புரட்சி ஏற்பட்டு வருகிறது.

அடுத்த 5 ஆண்டுகளில் என்ன நடக்கும் என்ற பயத்தில் ஐ.டி. நிறுவனங்கள் உள்ளன. உங்களுக்கு அதை கல்லூரியிலேயே கற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த 4 ஆண்டை மிகவும் கவனமாக பயன்படுத்துங்கள்,” என்றார்.

சி.ஐ.டி. கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சந்தோஷ் பேசுகையில், “பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி அடைபவர்களில் 10 சதவீதம் பேர் தான் கிரேட் 1 கல்லூரியில் வாய்ப்பு கிடைக்கிறது.

கிரேட் 1 கல்லூரியில் இணைவதையே பெரிய வெற்றியாக கருதலாம். தற்போது கோல் போஸ்ட்கள் மாறி வருகின்றன. அதற்கு ஏற்ப உங்கள் இலக்குகளை திட்டமிட்டு, திறமைகளை மேம்படுத்த வேண்டும்,” என்றார்.

சி.ஐ.டி., கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கை பிரிவு இயக்குனர் நிஷ்சல் ராஜ்குமார், தலைமை கல்வி அதிகாரி அலமேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us