வளர்ச்சி அடைந்த இந்தியாவாக மாற ஏஐ தொழில்நுட்பம் உதவும்; சுபான்ஷூ சுக்லா
வளர்ச்சி அடைந்த இந்தியாவாக மாற ஏஐ தொழில்நுட்பம் உதவும்; சுபான்ஷூ சுக்லா
UPDATED : டிச 08, 2025 06:49 PM
ADDED : டிச 08, 2025 06:53 PM

புதுடில்லி:
2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற நமது கனவை அடைய ஏஐ தொழில்நுட்பம் உதவும் என இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா தெரிவித்துள்ளார்.
டில்லியில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ தொழில்நுட்பம்) தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா பேசியதாவது: ஏஐ தொழில்நுட்பம் பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்ள ஒரு கருவியாகும். 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற நமது கனவை அடைய ஏஐ தொழில்நுட்பம் உதவும்.
நமது இளைய தலைமுறை இந்தக் கனவை நிறைவேற்ற பொறுப்பை ஏற்றுக்கொண்டால், 2047ம் ஆண்டுக்கு முன்பே நாம் இந்த இலக்கை அடைவோம். இவ்வாறு அவர் பேசினார்.
டில்லி முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது:
பிரதமர் மோடி எப்போதும் நாட்டிற்குள் உயர்மட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டுவர முயற்சிக்கிறார். மத்திய அரசு ஏஐ தொழில்நுட்பத்தை கற்பிக்க முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இவ்வாறு அவர் பேசினார்.

