UPDATED : மே 31, 2026 12:00 PM
ADDED : மே 31, 2026 12:01 PM
அ நிறம் | அளவு
ஈரோடு:
பள்ளி கல்வித்துறை சார்பில், ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி நடந்தது. முதற்கட்டமாக துவக்க நிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர் என, 100 பேர் பங்கேற்றனர்.
ஈரோடு சி.இ.ஓ., அலுவலகத்தில் தொடங்கிய பயிற்சியை, முதன்மை கல்வி அலுவலர் மான்விழி துவக்கி வைத்தார். செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) பயன்படுத்தி பள்ளி பாடங்களை மாணவ, மாணவிகளுக்கு எளிதில் கற்க செய்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
