தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு உதவி பெறும் பள்ளி மூடல்

அரசு உதவி பெறும் பள்ளி மூடல்

அரசு உதவி பெறும் பள்ளி மூடல்


UPDATED : ஜூலை 12, 2026 06:09 PM

ADDED : ஜூலை 12, 2026 06:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 12, 2026 06:09 PM ADDED : ஜூலை 12, 2026 06:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மாணவர்கள் யாரும் இல்லாததால் அரசு உதவிபெறும் பள்ளி மூடப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா சல்லிப்பட்டியில் அரசு உதவிபெறும் ஆர்.சி., துவக்கப்பள்ளி செயல்பட்டது. இங்கு கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்தது.

5ம் வகுப்பில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே இருந்தார். அந்த மாணவரும் நடப்பு கல்வியாண்டில் ராஜபாளையத்திற்கு மாறினார். இங்கு பணியாற்றிய ஒரே ஒரு ஆசிரியரும் ஸ்ரீவில்லிபுத்துாரில் உள்ள பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

இதனால் அப்பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us