UPDATED : ஜூன் 27, 2025 12:00 AM
ADDED : ஜூன் 27, 2025 08:41 AM
சென்னை:
இளநிலை மருத்துவ படிப்புக்கான, நீட் நுழைவு தேர்வில், ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் படித்த ஐந்து மாணவர்கள், முதல் 10 இடங்களை பிடித்து சாதனை படைத்துஉள்ளனர்.
இதுகுறித்து, அந்நிறுவன நிர்வாக இயக்குநர் தீபக் மெஹ்ரோத்ரா கூறியதாவது:
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வில், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ஹரியானா, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், உத்தராகண்ட், தாத்ரா - நாகர்ஹவேலி, ஜம்மு - காஷ்மீர், சத்தீஸ்கர், கோவா, டையூ - டாமன் மாநிலங்களில் முதல் இடத்தை, ஆகாஷ் நிறுவன மாணவர்கள் பிடித்து சாதித்துள்ளனர்.
மேலும், தரவரிசையின் 100 இடங்களில், 35 இடங்களை ஆகாஷ் மாணவர்கள் கைப்பற்றி உள்ளனர். அகில இந்திய தரவரிசையில், சென்னையை சேர்ந்த ஷயான் அப்துார் ரஹீம் 166; கிரிஸ்டோ பிரின்ஸ் 234; சாய் ஸ்ரீராம் 542; வி.எம்.திரிபுவன் 842வது இடங்களை பிடித்து சிறப்பித்துள்ளனர்.
நீட் நுழைவுத்தேர்வுக்கு சரியாக திட்டமிடுவது, மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு நேர மேலாண்மையை சரியாக கையாள்வது, பதற்றம் இல்லாமல் சவால்களை எதிர்கொள்வது, உற்சாகமான மனநிலையில் படிப்பது மற்றும் தேர்வை எதிர்கொள்வது, லட்சியத்தை நோக்கி பயணிப்பது குறித்து நாங்கள் பயிற்சி அளிப்பதால் தான், எங்கள் மாணவர்கள் தொடர்ந்து சாதிக்கின்றனர்.
இவ்வாறு, அவர் கூறினார்.