UPDATED : ஏப் 12, 2025 12:00 AM
ADDED : ஏப் 12, 2025 05:36 PM

சென்னை:
உச்சநீதிமன்றம் தீர்ப்பை அடுத்து, 10 மசோதாக்களும் சட்டமானதாக அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.
சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட, 10 மசோதாக்கள் மீது, நீண்ட நாட்களாக முடிவெடுக்காமல் இருந்துவிட்டு, பிறகு அவற்றை ஜனாதிபதியின் பரிசீலனைக்காக அனுப்பி வைத்த கவர்னர் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டது.
10 மசோதாக்களை கவர்னர் கிடப்பில் போட்டது சட்டப்படி தவறு என, உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்தது. அத்துடன், இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாகவே கருதப்படும் என்றும் கூறியுள்ளது. உச்சநீதிமன்றம் தீர்ப்பை அடுத்து, 10 மசோதாக்களும் சட்டமானதாக அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.
கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிராக அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சட்டமான மசோதாக்கள் என்ன?
1. தமிழ்நாடு மீன்வள பல்கலை மசோதா
2. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை மசோதா
3. பல்கலைக் கழகங்கள் சட்டத்திருத்த மசோதா
4. டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலை மசோதா
5. எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை மசோதா
6. தமிழ்நாடு வேளாண் பல்கலை சட்டத்திருத்த மசோதா
7. தமிழ்நாடு பல்கலை சட்டத்திருத்த (2வது) மசோதா
8. தமிழ் பல்கலை சட்டத் திருத்த மசோதா
9. தமிழ்நாடு மீன்வள பல்கலை மசோதா
10. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை மசோதா.

