தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அகில இந்திய செஸ் தொடர் சென்னை பல்கலைகள் அபாரம்

அகில இந்திய செஸ் தொடர் சென்னை பல்கலைகள் அபாரம்

அகில இந்திய செஸ் தொடர் சென்னை பல்கலைகள் அபாரம்


UPDATED : மார் 21, 2026 09:34 PM

ADDED : மார் 21, 2026 09:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 21, 2026 09:34 PM ADDED : மார் 21, 2026 09:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
உத்தர பிரதேசத்தில் நடந்த பல்கலைகளுக்கு இடையிலான செஸ் தொடரில், சென்னை பல்கலை அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியது; எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது.

உத்தர பிரதேசம் மாநிலம் மீரட்டில், ஐ.ஐ.எம்.டி., பல்கலை சார்பில், அகில இந்திய பல்கலைகளுக்கு இடையிலான செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. பல மாநிலங்களில் இருந்து, 15 அணிகள் போட்டியிட்டன; 'சுவிஸ்' முறையில் நடந்தன.

இதன் மகளிர் இறுதிப் போட்டிகள் நேற்று நடைபெற்றன. முடிவில் தமிழகம் சார்பில் போட்டியிட்ட, சென்னை மாவட்ட பல்கலை அணிகள், முதல் இரண்டு இடங்களை பிடித்து அசத்தின.

முறையே 17.5 புள்ளிகள் பெற்ற சென்னை பல்கலை அணி தங்கப் பதக்கத்தையும், 14.5 புள்ளிகளுடன் சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி இரண்டாவது இடத்தை வென்று, வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us