தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அகில இந்திய தொழில் தேர்வு: தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

அகில இந்திய தொழில் தேர்வு: தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

அகில இந்திய தொழில் தேர்வு: தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்


UPDATED : செப் 27, 2026 03:06 PM

ADDED : செப் 27, 2026 03:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 27, 2026 03:06 PM ADDED : செப் 27, 2026 03:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் அகில இந்திய தொழில் தேர்வுக்கு தனி தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

கலெக்டர் பத்மஜா செய்திக்குறிப்பு:


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கைவினைஞர் பயிற்சி திட்டத்தின்கீழ் டி.ஜி.டி.,யில் நடத்தப்படும் அகில இந்திய தொழில் தேர்வில் தனித்தேர்வர்களாக பங்கேற்க தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2027ம் ஆண்டு ஜூலை மாதம் கைவினைஞர் பயிற்சி திட்டத்தின்கீழ் டி.ஜி.டி.,யில் நடத்தப்படும் அகில இந்திய தொழில் தேர்வில் தனித்தேர்வர்களாக பங்கேற்க விரும்புவோர் விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய விளக்க குறிப்பேடு, தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான வழிகாட்டுதல் ஆகியவற்றை www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

தேர்வு கட்டணம் 200ஐ www.karuvoolam.tn.gov.in என்ற இணைய தளத்தில் இ-சலான் மூலம் செலுத்தி, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் விளக்க குறிப்பில் குறிப்பிட்டுள்ள மாவட்ட அரசு தொழிற் பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு, முதனிலைத் தேர்வுக்கான எழுத்து தேர்வு வரும் நவம்பர் 26ம் தேதி சென்னை, கிண்டி அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும்.

எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு செய்முறை தேர்வு வரும் மறுநாள் 27ம் தேதி நடைபெறும். இதற்கான முழு வழிகாட்டுதல்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம். தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அக்டோபர் 9ம் தேதி ஆகும். அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us