தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முன்னாள் மாணவர்கள் பங்களிப்பு அரசு பள்ளிக்கு கலையரங்க கட்டடம்

முன்னாள் மாணவர்கள் பங்களிப்பு அரசு பள்ளிக்கு கலையரங்க கட்டடம்

முன்னாள் மாணவர்கள் பங்களிப்பு அரசு பள்ளிக்கு கலையரங்க கட்டடம்


UPDATED : மார் 16, 2026 04:22 PM

ADDED : மார் 16, 2026 04:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 16, 2026 04:22 PM ADDED : மார் 16, 2026 04:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி:
கூத்தக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பங்களிப்பில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கலையரங்க கட்டடம் திறப்பு விழா நடந்தது.

கள்ளக்குறிச்சி அடுத்த கூத்தக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1996 - 97ம் கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளின் பங்களிப்பில் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கலையரங்க கட்டடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.

விழாவிற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி, கலையரங்கத்தினை திறந்து வைத்து, இப்பள்ளிக்கு சிறப்பான பங்களிப்பு வழங்கிய முன்னாள் மாணவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் நன்றி தெரிவிப்பதாக கூறினார் .

பள்ளி தலைமை ஆசிரியர் மகுடதுரை முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர்களின் ஒருங்கிணைப்பாளர் ஹரிகிருஷ்ணன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us